இந்தியாவில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 987ஆக அதிகரிப்பு!

Monday, March 30th, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 987 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் 87 பேர் சிகிச்சையின் பின்னர் பூரண சுகம் அடைந்துள்ளனர். இது தவிர, 25 பேர் மரணமடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய முடக்கம் காரணமாக பாதிப்படைந்துள்ளவர்களுள் பெரும்பாலானவர்கள் பொருளாதாரத்தில் பின்னிலையில் உள்ளவர்களே என தெரிவித்த அவர், அதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த முஜீப் முகமது தனது பேஸ்புக் பக்கத்தில் கைகோர்ப்போம், வீடுகளை விட்டு வெளியே பொது இடங்களுக்கு சென்று முகத்தை மூடாமல் தும்முவோம். வைரஸை பரப்புவோம் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவு செய்தார்.

அவரது கருத்து சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதை அடுத்து, சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை நேற்று முன் தினம் பொலிஸார் கைது செய்தனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்த சாப்ட்வேர் இன்ஜினியர் முஜீப் முகமதுவை இன்போசிஸ் நிறுவனம் பணி நேற்று பணி நீக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: