இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பம் – தற்காலிக சபாநாயகர் நியமனம்!
Monday, June 24th, 2024
இந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றம் இன்று ஆரம்பமாகிய நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 543 உறுப்பினர்களும் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதன்படி புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கு ஏதுவாக தற்காலிக சபாநாயகராக பா.ஜ.கவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 7 முறை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
இந்நிலையில், நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மஹ்தாப்பிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தற்காலிக சபாநாயகராக மஹ்தாப் பதவியேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சீனாவை மிரட்டும் அமெரிக்கா!
விசேட தூதுவர் நியமனம்!
துப்பாக்கி விற்றவர் மீது வழக்கு தொடர ஜெர்மனி ஆய்வு!
|
|
|


