44 மாலுமிகளுடன் சென்ற ஆர்ஜன்டீனா நீர்மூழ்கி கப்பல் மாஜம்!

Sunday, November 19th, 2017

காணாமல் போன ஆர்ஜன்டீனா நீர்மூழ்கி கப்பல் கடற்படை தளங்களுடன் பலமுறை தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஆஜன்டீனா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களின் தொடர்பு ஒரு சில விநாடிகளுடன் துண்டிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்படை தளங்களில் இருந்து நீர் முழ்கி கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் எவையும் பலனளிக்க வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் உறுதியான இடத்தை கண்டுபிடிக்க முடியாததன் காரணமாக தொடர்பினை மேற்கொள்ள முடியாதிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஆஜன்டீனா கடற்படையினர் அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள செய்மதி நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனங்களுடன் இணைந்து நீர்மூழ்கி கப்பலை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
கடந்த 3 நாட்களாக காணாமல் போயுள்ள நீர்மூழ்கி கப்பலில் 44 மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள கடற்படை முகாமில் இருந்து தெற்கு ஆஜன்டீனா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை அதனுடைய தொடர்பு துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: