இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மூ இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்பு!
Monday, July 25th, 2022
இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசர் என்.வி. ரமணா முன்னிலையில் இன்று முற்பகல் 10.15 க்கு இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து திரௌபதி முர்மு புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
முன்பதாக ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக கடந்த 18 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், கடந்த 21 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில், பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
அதற்கமைய, இன்றையதினம் ஜனாதிபதியாக பதவியேற்ற திரௌபதி முர்மு, இந்தியாவின் முதல் பழங்குடியின மற்றும் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


