இந்தியர்கள் லிபியாவுக்கு செல்ல தடை!

இந்தியர்கள் லிபியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
லிபியாவில் அரசு படைகளுக்கும், ஐ.எஸ். குழுவினருக்கும் இடையேயான மோதலினால் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்று சிர்தே நகரில் நடந்த மோதல்களில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
லிபியாவில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு அங்கு பயணம் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
லிபியாவில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை, லிபியாவில் இந்திய நாட்டவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் மற்றும் உயிருக்கு சவாலான விடயங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, லிபியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு பயண தடை விதிப்பது என அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பயண ஆலோசனை அறிவிப்பில் கூறியுள்ளது.
மேலும், இந்த முடிவு குறித்து அனைத்து குடியுரிமை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
Related posts:
|
|