இந்தியத் திரைப்படங்களுக்குத் பாகிஸ்தானில் தடை!
Sunday, October 2nd, 2016
பாகிஸ்தானின் முக்கிய திரையரங்குகள் இந்தியத் திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என்று முடிவெடுத்துள்ளன.
இரு நாடுகளுக்கிடையே பதற்ற நிலை அதிகரித்ததை அடுத்து, பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது.
இதனை அடுத்து நேற்று பாகிஸ்தானின் முக்கிய திரை அரங்குகளில் இந்திய திரைப்படங்களை திரையிடப் போவதில்லை என பாகிஸ்தான் திரையரங்குகள் முடிவெடுத்துள்ளன.
பாகிஸ்தானின் இராணுவத்துக்கு ஆதரவாக தாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அவை கூறுகின்றன. லாகூர், கராச்சி மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய பெரு நகரங்களில் இந்தியப் படங்களுக்குத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
மெக்சிக்கோவின் ஜனாதிபதியானார் அன்ரஸ் மனுஎல்!
ஸிம்பாப்வேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டம்!
சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் சுயநல சிறுபான்மையினரால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைப்பது முற...
|
|
|


