இத்தாலி புதிய பிரதமராக பௌலோ ஜென்டிலோனி நியமனம்!

கடந்தவாரம் நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பிறகு பதவி விலகிய மட்டாயோ ரென்ஸியின் இடத்தில், பிரதமராக இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் பௌலோ ஜென்டிலோனி நியமிக்கப்பட்டுள்ளார்.
முந்தைய நிர்வாகத்தின் கட்டுக்கோப்புக்குள் பணிபுரிய இருப்பதாக குறுகிய ஏற்புரையில் தெரிவித்திருக்கும் ஜென்டிலோனி, அவருடைய மத்திய இடது ஜனநாயக கட்சியின் தலைவரான ரென்ஸியால் தெரிவு செய்யப்பட்ட பல அமைச்சர்களை மறு நியமனம் செய்வார் என்று தெரிகிறது.
புதன்கிழமை கூடும் நாடாளுமன்றத்தில் இந்த புதிய அமைச்சரவை தொடர்பாக வாக்கெடுக்கப்படும்.
முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறிவருகின்ற ஐந்து நட்சத்திர இயக்கம் என்கிற எதிர்க்கட்சி இந்த வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக கூறியுள்ளது.
62 வயதாகும் ஜென்டிலோனி, முன்னாள் பத்திரிகையாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார்.
Related posts:
முதல்முறையாக ஐ.நா. சபையில் தீபாவளி!
கார்க்குண்டுத் தாக்குதல்: பாகிஸ்தானில் 7 பேர் உயிரிழப்பு !
ஜிஎஸ்எல்வி-எஃப்10 ஏவுகணை பயணம் தோல்வி!
|
|