இத்தாலியில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதல் : 20 பேர் பலி!

தெற்கு இத்தாலியில் இரண்டு பயணிகள் புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரியின் வடமேற்கு நகரான ஆண்டிரியாவில் அருகில் உள்ள ஒற்றை தண்டவாளத்தில் இந்த இரண்டு ரயில்களும் மோதிக் கொண்டன. மீட்பு பணியாளர்கள், சிக்கியுள்ள பயணிகளை மீட்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என கொரோட்டோ நகரின் மேயர் மாசிமோ மாசிலி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூர் மருத்துவமனைகள் ரத்த தானம் செய்வோருக்கு அழைப்பு விடுத்துள்ளன. முன் பெட்டிகள் முழுமையாக அழிந்துள்ளதாகவும், குறைந்தது ஒரு ரெயில் எஞ்சினாவது அதிகப் படியான வேகத்தில் வந்திருக்கும் என்றும் தெரிகிறது. இரண்டு ரயில்களும் எப்படி ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் பயணித்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
Related posts:
வெளியானது நீட் தேர்வு முடிவுகள் – மாணவர்கள் பலர் அதிர்ச்சி!
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இலத்திரனியல் அனுமதி அவசியம் – முதலமைச்சர்!
போர் உக்கிரமடையும் பட்சத்தில் புடினை நேரடியாக குறிவைக்கத் தயாராகும் அமெரிக்கா!
|
|