வெளியானது நீட் தேர்வு முடிவுகள் – மாணவர்கள் பலர் அதிர்ச்சி!

Tuesday, June 5th, 2018

இந்தியாவில் கடந்த மே 6-ம் திகதி நடைபெற்ற மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது.

இந்தியா முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளதுடன், தமிழகத்தில் மட்டும் சுமார் 1.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

வினாத்தாள் குளறுபடி காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றம் சங்கல்ப் என்ற அமைப்பு மனு தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டது.

இதையடுத்து, 2 மணிக்கு வெளியாக வேண்டிய தேர்வு முடிவுகள், முன்னதாகவே வெளியாகியுள்ளது.

இதில் அகில இந்திய அளவில் கல்பனா குமாரி என்ற மாணவி 720க்கு 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். மாணவி கல்பனா குமாரி, இயற்பியலில் 180க்கு 171 மதிப்பெண்களும், வேதியியலில் 180க்கு 160 மதிப்பெண்களும் உயிரியலில் 360க்கு 360 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

13 லட்சத்திற்கும் அதிமான மாணவ, மாணவியர் தேர்வு எழுதிய நிலையில், 7 லட்சம் பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

Related posts: