11,000 ஆசிரியர்களை அதிரடியாக நீக்கிய துருக்கி அரசு!

Friday, September 9th, 2016

துருக்கியில் தடை செய்யப்பட்ட பிகேகே என்றழைக்கப்படும் குர்திஸ்தான் பணியாளர்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 11 ஆயிரம் ஆசிரியர்களை துருக்கி அரசாங்கம் பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியின் தென் கிழக்கே உள்ள சுமார் 14 ஆயிரம் ஆசிரியர்கள் சில வழிகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக நம்புவதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் துருக்கியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் பள்ளிகள் மற்றும் போலிஸ், இராணுவம் மற்றும் சட்டத்துறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் களையெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

160727083048_turkey_flag_rally_624x351_ap

Related posts: