இத்தாலியில் அவசரகால நிலைம பிரகடனம்!
Friday, August 26th, 2016
இத்தாலியில் பூமியதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை இத்தாலியின் சில பகுதிகளில் கடுமையான பூமியதிர்வு ஏற்பட்டது.
இந்த பூமியதிர்வில் சுமார் 250 பேர் வரையில் கொல்லப்பட்டதுடன் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்திருந்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியிருக்கக்கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.பூமியதிர்வின் பின்னர் மீளவும் சில அதிர்வுகள் ஏற்பட்டதனால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மேற்குலகநாடுகளில் செயற்படுவதற்கான இரகசிய இராணுவங்களை புட்டின் உருவாக்கி வருகின்றார்.
இந்தியாவும், சீனாவும் போட்டியாளர்கள் அல்ல - இரு நாடுகளும் நெருங்கிய கூட்டாளிகள் - சீன வெளியுறவு அமை...
காபூல் மசூதியில் குண்டுத்தாக்குதல் – 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்!
|
|
|


