ஆஸி. தடுப்பு முகாமில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை, இந்திய தஞ்சக் கோரிக்கையாளர்கள்!

Wednesday, August 3rd, 2016

 

ஆஸ்திரேலிய குடியேற்ற மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையின் புதிய தகவலின் படி, ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் தடுப்பு முகாம்களில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் இலங்கையைச் சேர்ந்த 94 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 65 பேரும் தஞ்சக் கோரிக்கையாளர்களாக உள்ளனர். நியூசிலாந்து (199பேர்), ஈரான் (175), வியட்நாம் (142) தஞ்சக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக உள்ளது. வியட்நாமுக்கு அடுத்தப்படியாக உள்ள இலங்கை தஞ்சக் கோரிக்கையாளர்களில் பெரும்பாலானோர் சில ஆண்டுகளுக்கு முன் கடல் வழியாக ஆஸ்திரேலியாவை வந்தடைந்தவர்கள்.

மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் தடுப்பிற்கு பின்னர் ஆஸ்திரேலியாவில் வாழ அந்நாட்டு அரசு அனுமதி தருகிறது என்ற நம்பிக்கையிலேயே இலங்கையைச் சேர்ந்த அகதிகள் ஆஸ்திரேலியாவை அடைய முயற்சித்து வருகின்றனர்.

ஆனால் சமீப காலமாக கடல் வழியாக வரும் அகதிகளை ஆஸ்திரேலியா தொடர்ந்து திருப்பி அனுப்பி வருவதுடன் போர் முடிவினை காரணம் காட்டி இலங்கை அகதிகளை பொருளாதார அகதிகளாகவும் அடையாளப்படுத்துகிறது. இதனால் தமிழ் அகதிகளுக்கு தஞ்சக்கோரிக்கை அளிப்பது பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.

Related posts: