தமிழகத்திற்கு தற்காலிக முதல்வர் அவசியமில்லை : நீதிமன்றம் உத்தரவு!

Thursday, October 6th, 2016

தமிழகத்தில் தற்போது தற்காலிக முதல்வர் அவசியமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் திகதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், கடந்த 3ம் திகதி டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த விபரங்களை வெளியிட தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், அப்போலோ மருத்துவமனை ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஜெயலலிதாக குணமாகி வரும் வரை புதிய முதலமைச்சரை நியமிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று காலை தலைமை நீதிபதி கவுல் முன் விசாரணைக்கு வந்தது. தற்காலிக முதலமைச்சரை நியமிக்க கோரும் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, சிகிச்சையில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிட கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார். மேலும் இந்த பொதுநல மனு விளம்பரத்திற்காகவும், அரசியல் காரணங்களுக்காகவும் தொடரப்பட்டிருப்பதாக கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

highcourt_1970547f_2731399f

Related posts: