ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

சீனாவில் டீய்பான் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
29 பயணிகளுடன் சென்ற படகு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதன்போது படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கினர். இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 11 பேரை மீட்டு அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருவதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பிரான்ஸில் பதற்றம் - ஈஃபில் கோபுரம் நாளை மூடப்படும்!
பசுமைத் தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கு உதவத் தயார் - ஐ.நாவில் தென்கொரியா அதிபர் அறிவிப்பு!
நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலகப் போவதாக அறிவிப்பு!
|
|