ஆயுதக் குழுவின் வசம் பாலஸ்தீன பாடசாலைகள் – ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!

பாலஸ்தீனில் காணப்படும் பாடசாலைகளை அந்தநாட்டு ஆயுதம் ஏந்திய குழுவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு வன்முறையின்போது அவர்கள் 7 பாடசாலைகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நடவடிக்கையினால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால், உடனடியாக அந்த பாடசாலைகளை விட்டு வெளியேறுமாறு, ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் பாலஸ்தீன நாட்டில் நிலவும் உள்நாட்டு போரினால் லெபனானில் அதிகமான பாலஸ்தீனியர்கள் ஏதிலிகளாக தஞ்சம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிலிப்பைன்ஸில் போர் நிறுத்தம் இரத்து!
பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு; பளை பகுதியில் பதட்டம்!
ரஷ்யா விதித்திருந்த தடையை நீக்குவதற்கு இணக்கம்!
|
|