ஆப்கானிஸ்தான் ஹெல்மண்ட் மாகாணத்தில் கடும் மோதல்!
Sunday, July 31st, 2016
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தென் எல்லையில் பலத்த மோதல் நடந்துவருகிறது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கான்ஷின் மாவட்டத்தை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஹெல்மண்ட் ஆளுநர் பேசுகையில், மாவட்ட தலைமையகம் மற்றும் காவல் துறை தலைமையகக் கட்டடம் ராணுவ படைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கூறியுள்ளார். விமானப்படை அழைக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் நூறு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை கண்காணிக்கும் அமெரிக்க அரசின் முக்கிய கண்காணிப்பு அமைப்பு, அதன் காலாண்டு அறிக்கையில் ஆப்கான் படைகள் தாலிபனின் அதிகரித்துவரும் நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பாகிஸ்தான் எல்லை அருகில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு, பதிலடி கொடுக்க தடுமாறி வருவதாக குறிப்பிட்டுள்ள சமயத்தில் இந்த மோதல் நடந்துள்ளது.
Related posts:
|
|
|


