ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்ல தடை!
Wednesday, December 21st, 2022
ஆப்கானிஸ்தான் மகளிர் பல்கலைக்கழகங்களை மூடவும், ஆப்கானிஸ்தான் பெண்கள் பல்கலைக்கழகங்களின் கல்வி கற்பதற்கு தடை விதிக்கவும் தலிபான் ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலிபான் அரசின் உயர்கல்வி அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துருப்புக்கள் கடந்த ஆகஸ்ட் 2021 இல் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதையடுத்து தலிபான்கள் நாட்டில் மீண்டும் ஆட்சியமைத்தனர்.
தற்போது, தலிபான்கள் கடுமையான ஷரிஆ சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தியுள்ளனர்.
தலிபான் சட்டங்களின்படி, பெண் பிள்ளைகள் இடைநிலைக் கல்வி கூட நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சீனாவில் நிலநடுக்கம் !
ஆட்சி அமைக்க இரண்டு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு!
2 அடி உயரம் கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் மறைவு!
|
|
|


