ஆப்கானிஸ்தானில் தற்கொலை குண்டுத் தாக்குதல்: மாகாண ஆளுனர் ஸ்தலத்திலேயே பலி!
Saturday, March 11th, 2023
ஆப்கானிஸ்தான் வட பல்ஹா மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் அந்த மாகாண ஆளுனர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியதன் பின்னர் கொல்லப்பட்ட உயர்மட்ட தாலிபான் தலைவர் இவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு உரிமைக் கோரியுள்ளது. தமது உறுப்பினர் ஒருவர் ஆளுனரின் கட்டடத்தினுள் நுழைந்து தற்கொலை குண்டை வெடிக்க வைத்ததாக, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைக் காலத்தில் தாலிபான்களுக்கு எதிரான தாக்குதல்கள் குறைவடைந்துள்ள போதிலும் தாலிபான் ஆதரவாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் இலக்கு வைத்து தாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான தாலிபான் ஆளுனர் முன்னர் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணத்தில் பணியாற்றிய போது, ஐ.எஸ்.ஐ.எஸ்.இற்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


