ஆப்கானிஸ்தானில் செயற்பாடுகளை இடைநிறுத்தியது செஞ்சிலுவை சங்கம்!

Friday, February 10th, 2017

ஆப்கானிஸ்தானில் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அங்கு தமது செயற்பாடுகளை இடைநிறுத்திக் கொள்வதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அதிரடி தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களின் தொடரணி மீதான தாக்குதலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சங்க செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் குறிப்பிட்டார். இதேவேளை, மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான தாக்குதலானது அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பான சூழல் என்பது மிகவும் சவால் மிக்கதொன்றாக அமைந்துள்ளது. ஆனாலும், அங்கு பணியாற்றும் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் தொடர்ந்தும் முயற்சித்து வந்தோம். ஆனால் குறித்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடளாவிய ரீதியில் நாம் முன்னெடுத்துவந்த அனைத்து செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் முதல்முறையாக செஞ்சிலுவை சங்க ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலானது, ஊழியர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

shamsara20120802125011090-600x336

Related posts: