ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் – 22 பேர் பலி!
Tuesday, January 18th, 2022
மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த இரு நிலநடுக்கங்களில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
Related posts:
நெதர்லாந்து பத்திரிகையாளரிடம் இருந்து மலேசிய விமான பாகங்கள் பறிமுதல்!
பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிப்பு!
|
|
|


