ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அமைப்பு வேரோடு அழிக்கப்படும்- துருக்கி பிரதமர்!

Wednesday, July 20th, 2016
கடந்த வெள்ளியன்று துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, துருக்கியின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று துருக்கி பிரதமர் பினாலி யில்டிரிம் தெரிவித்துள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டதாக அரசால் குற்றம் சுமத்தப்பட்ட இயக்கம், வேரோடு அழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபட்ட இயக்கத்தின் தலைவர் விசாரணைக்காக நாடு கடத்தப்பட வேண்டும் என்று கோரி அவரைப் பற்றிய தகவல்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் ஃபெத்துலா க்வுலன் என்ற அந்த மதகுரு தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுவதை மறுத்திருக்கிறார்.

துருக்கியில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் எனவே பழிவாங்கும் எண்ணத்தில் மக்கள் செயல்பட வேண்டாம் எனவும் பிரதமர் யில்ட்ரிம் வலியுறுத்தியுள்ளார்.

ஆட்சிக் கவிழ்ப்பு சதியை தொடர்ந்து துருக்கியில் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், போலிஸார் மற்றும் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அல்லது பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: