அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் : டிரம்ப்!
Tuesday, January 31st, 2017
ஏழு முஸ்லிம் நாடுகளை சேர்ந்த குடிமக்கள் அமெரிக்கா வருவதற்கும், அமெரிக்காவின் அகதிகள் திட்டத்திற்கும் தடை விதித்து தான் பிறப்பித்த உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த தடை உத்தரவு குறித்து ஒருவார கால அவகாசம் கொடுத்திருந்தால் கெட்ட மனிதர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்திருப்பார்கள் என்று தன்னுடைய ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வார இறுதியில் அமெரிக்க விமான நிலையங்களில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு இந்த தடையை குற்றம் சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார். டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தில் ஏற்பட்ட கணினிக் கோளாறு மற்றும் போராட்டக்காரர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றால் இடையூறு ஏற்பட்டதாக கூறியுள்ளார்.

Related posts:
பங்களாதேஷ் மத்திய வங்கி ஆளுனர் ராஜினாமா !
சவுதி அரேபிய கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் பலி!
ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – தயார் நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் !
|
|
|


