அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை – இராஜினாமா கோரிக்கையை நிராகரித்த அமைச்சர்!
Sunday, June 4th, 2023
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் இராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருப்பினும் இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த நேரத்தில் அரசியல் செய்வது சரியானது அல்ல என கூறியுள்ளார்.
அனைத்திலும் வெளிப்படைத்தன்மை என்பது தேவை என்றும் இந்த விடயத்திலும் தாம் அதனையே கடைபிடிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் மீட்பு, மறுசீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தருணத்தில் இவ்வாறு அரசியல் செய்யக் கூடாது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 8 பேர் உயிரிழப்பு!
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் 3.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பு - மத்திய வங்கியின் ஆளுநர் அஜ...
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...
|
|
|


