அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மக்கள் போராட்டத்தில்!

Monday, July 22nd, 2019

ஹொங்கொங் நாட்டவரை சீனாவிற்கு நாடு கடத்துவது தொடர்பான போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என ஹொங்கொங் மக்கள் சீற்றத்துடன் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் வெப்பநிலையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிருத்தானியாவின் காலனித்துவத்தில் இருந்த ஹொங்கொங் 22 வருடங்களுக்கு முன்னர் சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

சீனா, ஹொங்கொங்கை கையேற்றதன் பின்னர் முதன் முறையாக நடைபெறும் பாரிய ஆர்ப்பாட்ட போராட்டம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஹொங்கொங்கின் தலைவர் கரி லேமிற்கு எதிராக பதாதைகளை ஏந்திச் செல்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்ப்பாட்ட ஊர்வலம் அமைதியான முறையில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts: