அமைச்சரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரருக்கு மரண தண்டனை!

Wednesday, June 21st, 2017

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தலில் Abas Abdullahi Sheikh Siraji (31) என்பவர் எம்.பியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து இவருக்கு பொது துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.

சோமாலியா நாட்டு வரலாற்றில் இளம் வயதில் அமைச்சர் பதவி பெற்றது இவர் தான். இந்நிலையில், கடந்த மாதம் நாடாளுமன்ற வளாகத்திற்கு அமைச்சர் காரில் வந்துள்ளார். அப்போது, காரில் தீவிரவாதி வருவதாக தவறுதலாக எண்ணிய ராணுவ வீரர் ஒருவர் காருக்குள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இச்சம்பவத்தில் அமைச்சர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். அமைச்சரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று அந்நாட்டு ராணுவ நீதிமன்றத்திற்கு வந்தபோது அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

எனினும், தவறுதலாக நிகழ்ந்த சம்பத்திற்கு மரண தண்டனை விதித்திருப்பது கடுமையான தண்டனை எனக்கூறியுள்ள ராணுவ வீரரின் வழக்கறிஞர் இத்தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts: