அமெரிக்க வெளியுறவு செயலாளராக மிட் ரோம்னி நியமனம்?
Monday, November 21st, 2016
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்,தன்னை மிகவும் விமர்சனம் செய்தவர்களில் ஒருவரான மிட் ரோம்னியை சந்தித்துள்ளார். இதனால் மிட் ரோம்னி அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக நியமனம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்பை ஒரு மோசடி பேர்வழி என்று ரோம்னி விவரித்திருந்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பு, மிகவும் சிறப்பாக அமைந்ததாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை, ஒரு முழுமையான பேச்சுவார்த்தையாக அமைந்ததாக ரோம்னி தெரிவித்தார். தனது புதிய நிர்வாகத்தில் பணியாற்ற டிரம்ப் செய்துள்ள இதுவரை செய்த பல நியமனங்களைச் செய்துள்ளார். அவற்றில் பல சர்ச்சைக்குரியவையாக அமைந்துள்ளன.

Related posts:
சிரியா மீது தொடர்ந்து தாக்குதல் - அமெரிக்கா!
கொரோனா தொற்று - உலக அளவில் இதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பூரண நலமடைந்தனர் – சுகாதார அமைப்பு...
வளி மாசடைவால் வருடாந்தம் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் - உலக சுகாதார ஸ்தாபனம்!
|
|
|


