அமெரிக்க வான் தாக்குதலுக்கு ரஷ்யாவும் ஆட்சேபனை!

Saturday, May 20th, 2017

சிரியா மற்றும் ஜோடான் எல்லைப்பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொண்ட வான் தாக்குதலை சிரியாவும் ரஷ்யாவும் தமது ஆட்சேபனையினை வெளியிட்டுள்ளது

இந்த தாக்குதல், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் சிரியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளதுவான் தாக்குதலை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்க விமானிகள் எச்சரிக்கை செய்த போதிலும், அது ரஷ்ய சார்பான படைத்தரப்பினரால் முற்றாக உதாசீனம் செய்யப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

இதனை மறுத்துள்ள ரஷ்ய பிரதி வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெனடி கல்விற்றோ, அமெரிக்க வான் தாக்குதல் சிரிய இராணுவத்தை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார் இப்படியான நடவடிக்கைகள் மூலம் சிரிய பிரச்சனை மேலும் உக்கிரம் அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என அவர் மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்

Related posts: