ஊழலில் கொடிகட்டி பறக்கும் 18 நாடுகள்!

Monday, June 6th, 2016

செல்வச்செழிப்பு மிக்க ஜனநாயக நாடுகள் பல ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்ந்து வருவதை சர்வதேச வெளிப்படைத்தன்மை என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிட்டு வருகிறது.

ஊழல் குறித்து ஆய்வு நடத்துவதில் எப்போதும் வரையறுக்கப்பட்ட காரணிகள் எதுவும் இருப்பதில்லை. காரணம் ஊழல் இதுபோன்ற நாடுகளில் பொதுமக்களிடம் இருந்தே மிக கவனமாக கவித்துவமான பேச்சுக்களால் மறைக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 168 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் 100 நாடுகளை ஊழல் மலிந்துள்ள நாடுகளாக பட்டியல் இட்டுள்ளது சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு. இதில் 100-வது இடத்தில் இருக்கும் நாடு மிக குறைவான எண்ணிக்கையில் ஊழலை எதிர்கொள்கிறது.

இந்த பட்டியலில் மிக அதிகமாக ஊழல் மலிந்துள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது மெக்சிகோ. ஊழலே இல்லாத நாடாக அயர்லாந்து தெரிவாகியுள்ளது.

மொத்தமாக 75 புள்ளிகளை பெற்றுள்ள அயர்லாந்து உலகில் மிக அரிதாக ஊழல் நடைபெறும் நாடு என தெரிய வந்துள்ளது. இதன் அடுத்த இடத்தில் இருக்கும் நாடு ஜப்பான்.

சர்வதேச கோட்பாடுகளுக்கு உட்பட்டு இங்கு ஆட்சி நடைபெறுவதாலும், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளே இங்குள்ள பெரு நிறுவனங்களில் முதன்மை அதிகாரிகளாக நியமிக்கப்படுவதால் ஊழலுக்கு இங்கே இடமில்லை என கூறுகின்றனர்.

அடுத்த இடத்தில் இருப்பது சிலி, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிக அரிதாக ஊழல் நடைபெறும் நாடாக சிலி பார்க்கப்படுகிறது. ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ள எஸ்டோனியா நாடு அடுத்த இடத்தில் உள்ளது.

இந்த வரிசையில் ஊழல் மிக அரிதாக உள்ள நாடுகளில் பிரான்ஸ் 14-வது இடத்திலும், ஊழல் மலிந்துள்ள நாடுகளின் வரிசையில் ஸ்பெயின் 9-வது இடத்திலும், செக் குடியரசு 8-வது இடத்திலும், இதன் அடுத்த இடத்தில் தென் கொரியாவும், இத்தாலி 3-வது இடத்திலும், துருக்கி மற்றும் மெக்சிகோ ஆகிய இரண்டு நாடுகளும் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்வதில் முதல் இரண்டு இடங்களையும் தக்கவைத்துள்ளது

Related posts: