அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்சின் மனைவி காலமானார்!
Wednesday, April 18th, 2018
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோர்ஜ் எச்.டபுல்யூ. புஷ்சின் மனைவி பார்பரா புஷ் தனது 92வது வயதில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பார்பரா புஷ் உடல் நலம் பாதிப்பு அடைந்துள்ளதாக ஹூஸ்டனில் உள்ள முன்னாள் அதிபரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் அந்த அறிக்கையில், உடல்நலம் பாதிப்பு அடைந்துள்ள பார்பரா புஷ் விரைவில் நலம்பெற வேண்டும் என பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பார்பரா புஷ் தனது 92வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமேசன் காடுகளில் தீ!
ஐ.எஸ். தலைவர் படுகொலை - இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள புதிய எச்சரிக்கை!
கொரோனா தொற்று: பிரித்தானியாவில் மரண எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது!
|
|
|


