அமெரிக்க பாதுகாப்பு தகவலாளருக்கு ரஷ்யாவின் குடியுரிமை!
Tuesday, September 27th, 2022
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு உளவாளி எட்வர்ட் ஸ்னோடனுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி இன்று கையெழுத்திட்ட ஆணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான ஆணையில் பட்டியலிடப்பட்ட 75 வெளிநாட்டவர்களில் ஸ்னோடெனும் ஒருவராவார். இதற்கான உத்தரவு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரான ஸ்னோவ்டென், அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் இரகசிய ஆவணங்களை கசியவிட்டதை அடுத்து, அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அங்கிருந்து தப்பிச்சென்று 2013 முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார்.
000
Related posts:
வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரியா அதிபருக்கு அழைப்பு!
ட்ரம்பிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
பிரித்தானியாவில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு நீக்கம்! - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
|
|
|


