அமெரிக்க ஜனாதிபதி தோ்தல் : அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்!
Thursday, August 20th, 2020
அமெரிக்காவில் வரும் நவம்பா் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரப்பூா்வமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கொரோனா நெருக்கடி காரணமாக, இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக காணொலி காட்சி மூலம் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் அவா் ஜனாதிபதி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதை அடுத்து, ஜனாதிபதி தோ்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதித்து அவா் போட்டியிடுவது அதிகாரப்பூா்வமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை எட்டு ஆண்டுகள் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பு வகித்துள்ள 77 வயதுடைய ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டதை ஏற்பதற்கான உரையை நிகழ்த்தவுள்ளார்
இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் ஜோ பிடன் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது வாழ்வில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவம் என்று குறிப்பிட்டுள்ளார்..
Related posts:
|
|
|


