அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ட்ரம்ப், ஹிலரி முன்னணி!

Thursday, April 28th, 2016
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் 5 மகாணங்களிலும் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றுள்ளார். இதேவேளை ஹிலரி 4 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கான வேட்பாளர் தேர்தல் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஜனநாயக கட்சியில் ஹிலரி கிளிண்டனும், குடியரசு கட்சியில் டொனால்ட் ட்ரம்பும் முன்னணியில் உள்ளனர்.
இதேவேளை 5 மாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் 4 மாகாணங்களில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பெர்னி சாண்டர்ஸ் ரோத் ஐலேண்டில் மட்டும் வென்றார்.
இதன் மூலம் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

Related posts: