அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்- இறுதி முடிவுகளை அறிவிப்பதில் தொடரும் இழுபறி நிலை!

Friday, November 6th, 2020

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தேர்வுக் குழுவின் 270 வாக்குகளை பெற்றால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 264 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 வாக்குகளுடன் பின்தங்கி உள்ளார். ஜோ பைடன் வெற்றியை நெருங்கியிருக்கிறார். ஆனால் தபால் வாக்குகளை எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
அதேசமயம், இந்த தேர்தலில் தான் ஏற்கெனவே வெற்றி பெற்றதாக அறிவித்த டொனால்ட் ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். 3 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதில் மிச்சிகன், ஜார்ஜியா மாநிலங்கள் தொடர்பான வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பென்சில்வேனியாவில் தபால் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றம் சென்றால் வெற்றியை யாராலும் திருட முடியாது. யார் எந்த மாநிலத்தை உரிமை கோரினாலும் இறுதியில் நீதிமன்றம் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: