அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட 29 அமெரிக்கர்களுக்கு பயணத் தடை – ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
Friday, April 22nd, 2022
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட 29 புதிய அமெரிக்க குடிமக்களை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதன்”தடைப்பட்டியலில்” சேர்த்துள்ளது.
வியாழனன்று அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் “உயர் தலைவர்கள், வணிக சமூகத்தின் பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் ரஸ்ஸோபோபிக் நிகழ்ச்சி நிரலை வடிவமைக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் பல உயர் அதிகாரிகளின் மனைவிகள்” என்று கூறியது.
“எப்போதும் விரிவடைந்து வரும் ரஷ்ய எதிர்ப்புத் தடைகளுக்கு விடையிறுக்கும் வகையில்” அனைத்து தனிநபர்களும் ரஷ்ய கூட்டமைப்பிற்குள் நுழைய காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அரச தலைவர் ஜோ பைடன் ரஷ்ய குடிமக்கள் மீது புதிய தடைகளையும் உக்ரைனுக்கு 800 மில்லியன் டொலர் இராணுவ ஆதரவையும் அறிவித்த சிறிது நேரத்திலேயே இந்த தடைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


