அமெரிக்கா- ரஷ்யா போரிட்டால் ஒருவரும் தப்ப முடியாது – ஆரூடம் சொல்வும் புடின்!

அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீர்மானித்தால், இரு நாடுகளுக்கிடையிலான மோதல்களில் எவரும் உயிர்பிழைக்க மாட்டார்கள் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க திரைப்பட இயக்குநர் ஒருவருக்கு ரஷ்ய ஜனாதிபதி வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவித்த புடின், எம் மீதான அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் பட்சத்திலேயே ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்துவது தொடர்பில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
நான் எனது கடமைகளை சரியாக செய்யும் அதேவேளை, பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றி வருகின்றனர். பாதுகாப்பு படையினர் மீது நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
யேமன் மோதலில் 10,000 பேர் பலி - ஐ.நா!
அடுத்த அமெரிக்க அதிபர் யார்? ட்ரம்ப் 168 - ஹிலரி 122!
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாகவும் வடகொரியா ஏவுகணை பரிசோதனை !
|
|