ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாகவும் வடகொரியா ஏவுகணை பரிசோதனை !

Saturday, August 3rd, 2019

குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாகவும், கடந்த ஒரு வார காலத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தென்கொரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலுள்ள ஓரிடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.

இம்மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய ராணுவத்தினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்வினையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில், வடகொரியா, அமெரிக்காவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு முயற்சிக்க வேண்டுமென்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

Related posts: