அமெரிக்கா மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்த முயற்சி!
Saturday, November 25th, 2017
அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா அணுகுண்டு தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்கள் அதிக அளவில் செறிந்து வாழும் நியூயோக் வெள்ளை மாளிகை உள்ளிட்ட 16 தெரிவு செய்யப்பட்ட பகுதிகளை குறி வைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் அதிகாரத்திற்கு உட்பட்ட சில நாடுகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை வடகொரியா குறிவைத்துள்ளதன் காரணமாக, தாக்குதல் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பாரிய சேதம் ஏற்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது
Related posts:
தமிழகத்தில் நாளை தனியார் பாடசாலைகள் இயங்காது!
டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனம் - பிரபல விஞ்ஞானி எச்சரிக்கை!
சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றி - சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவ...
|
|
|


