தமிழகத்தில் நாளை தனியார் பாடசாலைகள் இயங்காது!

Thursday, September 15th, 2016

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநிலத்தில் வன்முறைப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த வன்முறை வெறியாட்டத்தில் தமிழர்களின் ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. லாரி டிரைவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

இதற்கு தமிழக அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை (16-ந்தேதி) வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதற்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் சுமார் 4600 பெட்ரோல் நிலையங்கள் நாளை மூடப்படும். லாரி உரிமையாளர் சங்கம், பால் முகவர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக தனியார் பள்ளிகளும் போராட்டக்களத்தில் குதிக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் நாளை மூடப்படும் என தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவித்திருக்கிறார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்றும், நாளை நடைபெறவேண்டிய காலாண்டு பாடத் தேர்வுகள் சனிக்கிழமை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

201609151121513444_Private-schools-declare-holiday-tomorrow-in-favour-of-tamil_SECVPF-400x200

Related posts: