அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

Tuesday, June 20th, 2017

சிரியாவின் யுத்த விமானம் ஒன்றை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியதை அடுத்து, ரஷ்யா எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது

இதன்படி தங்களது தாக்குதல் விமானங்களையும், அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் இலக்கு வைத்திருப்பதாக கருதுவதாக ரஷ்யா அறிவித்துள்ளதுசிரியாவின் ராக்கா பிராந்தியத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபடும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் முகாம்மீது தாக்குதல் நடத்தியநிலையில், குறித்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது.

அமெரிக்காவின் படையினருக்கு தங்களை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும், இதன்அடிப்படையிலேயே இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.அத்துடன் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் வெளிப்படையானதாக இருக்க வேண்டியது முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

எவ்வாறாயினும், ரஷ்யா, ராக்கா பிராந்தியம் தொடர்பில் அமெரிக்காவுடனான தொடர்பாடலை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது

Related posts: