அமெரிக்காவில் லொறி மீது பேருந்து மோதி 13 பேர் பலி!
Thursday, March 30th, 2017
அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓட்டுனருடன் சேர்ந்து மொத்தம் 15 பேர் பேருந்தில் இருந்தனர். பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் முதியவர்கள் ஆவார்கள்.இந்நிலையில், முக்கிய சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது எதிரில் வந்த ஒரு டிரக் லொறி மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில் ஓட்டுனர் உட்பட 13 பேர் பலியானார்கள். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு குழுவினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related posts:
இஸ்ரேலின் கொடூரம்: கண்மூடிப் பார்த்திருக்கும் உலக வல்லரசுகள்!
கடத்தப்பட்ட யுவதி மூன்று வாரங்களின் பின் மீட்பு!
கொரோனா வைரஸ்: அவுஸ்திரேலியாவில் 7வது நபர் மரணம்!
|
|
|


