அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: 15 க்கும் அதிகமானோர் காயம்!
Sunday, September 18th, 2016
அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் குண்டுவெடித்ததில் 15க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள 23வது தெருவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில், அங்கிருந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது, மேலும் பொலிஸ் நாயின் உதவியுடன் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எதற்காக இந்த சம்பவம் நடந்தது? தீவிரவாத தாக்குதலின் பின்னணியா? என்பது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


Related posts:
ஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது!
வடகொரியா மீது புதிய தடைகள் விதிக்கப்படும் விடயத்திற்கு ஐ.நா சம்மதம்!
பிரான்ஸ் ஜனாதிபதி - இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!
|
|
|


