அமெரிக்காவின் இராணுவ பாதுகாப்பிற்கு 618 பில்லியன் டாலர் ஒதுக்கிடு!

Sunday, December 25th, 2016

உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்காவுக்கு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது., இராணுவத்தில் வலிமை வாய்ந்த நாடாக திகழ்வதில் அந்த நாடு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் 2017-ம் ஆண்டுக்கு இராணுவத்துக்கு 618 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 லட்சத்து 40 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தயாரித்துள்ளது.

அந்த வகையில், அரசின் பிற சேவை துறைகளுக்கு நிதி ஒதுக்கி செலவழிப்பதை விட இராணுவத்துக்கு திரளான தொகையை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த நாடு 2017-ம் ஆண்டுக்கு இராணுவத்துக்கு 618 பில்லியன் டாலர் (சுமார் ரூ.41 லட்சத்து 40 ஆயிரம் கோடி) ஒதுக்கீடு செய்து பட்ஜெட் தயாரித்துள்ளது.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு விடுமுறையை கழிக்க ஹவாய் தீவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஒபாமா, இராணுவ பட்ஜெட் தொடர்பான ‘தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்-2017’க்கு ஒப்புதல் வழங்கி நேற்று முன்தினம் கையெழுத்திட்டார்.

இதில், அமெரிக்காவின் முக்கிய இராணுவ கூட்டாளியாக இந்தியாவை அங்கீகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அமெரிக்க ராணுவ மந்திரியும், வெளியுறவு மந்திரியும் எடுக்குமாறு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை செனட் சபையின் ஆயுத பணிகள் குழு தலைவர் ஜான் மெக்கைன் வெளியிட்டார். அப்போது அவர், “தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம் -2017, இந்தியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க வகை செய்துள்ளது” என கூறினார்.

நிர்வாக தரப்பில் இருந்து, ராணுவ கொள்முதல், தொழில் நுட்பத்தில் அனுபவமிக்க ஒருவரை தனியாக நியமித்து, இந்திய, அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர் இந்திய, அமெரிக்க ராணுவ வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, கூட்டு தயாரிப்பு, கூட்டு வளர்ச்சி வாய்ப்புகளில் உதவ வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்-2017-ன் முக்கிய அம்சங்கள்:-

* ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான யுத்த வகைக்கு 1.2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8,040 கோடி) நிதியம் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.

* 900 மில்லியன் டாலர் கூட்டணி ஆதரவு நிதியில் 400 மில்லியன் டாலர் நிதியை (சுமார் ரூ.2,680 கோடி) நிதியை பாகிஸ்தான் பெற்றுக்கொள்வதற்கு 4 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதாவது, பாகிஸ்தானுக்கு கூட்டணி நிதி தருவதற்கு அமெரிக்க ராணுவ மந்திரி, பாராளுமன்றத்துக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.

அதில் பாகிஸ்தான், ஹக்கானி நெட்வொர்க் பயங்கரவாத அமைப்பினரின் சொர்க்க புரியாக திகழ்ந்து, அந்த இயக்கத்தினர் தாராளமாகவும், சுதந்திரமாகவும் நடமாடுவதை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும், அந்த இயக்கத்தினர் பாகிஸ்தான் மண்ணை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும் பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக் கிறது என்றும் சான்று வழங்கப்பட வேண்டும். இது முக்கியமான நிபந்தனை ஆகும்..

இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க ராணுவ மந்திரி ஆஷ்டன் கார்ட்டர், இப்படி ஒரு சான்றிதழை அளிப்பதற்கு மறுத்து விட்டது நினைவுகூரத்தக்கது.

2

Related posts: