அப்துல்கலாம் சிலை திறக்கப்பட்டது!

Wednesday, July 27th, 2016

இராமேசுவரம் அருகே உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கல சிலை இன்று திறக்கப்பட்டது. மத்திய அமைச்சர்களான வெங்கையா நாயுடு மற்றும் மனோகர் பாரிக்கர் அவரது சிலையை திறந்து வைத்தனர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை இன்று திறக்கப்பட்டது.

மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் அவரது சிலையை திறந்து வைத்தனர். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சுபாஷ்ராம் ராவ் பாம்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாமின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மத்திய, மாநில அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.நினைவிடத்தில் கலாமின் சிலை திறப்பு மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த விழாவில் தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர்.மணிகண்டன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், அன்வர்ராஜா எம்.பி. மற்றும் கலாமின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.  சிலை திறப்பு விழாவைக் காண ஏராளமான பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகள் வந்துஉள்ளனர்

Related posts: