அணுஆயுத உற்பத்தி ஆலைகளை மூடுவதற்கு உறுதி!
Saturday, February 2nd, 2019
வடகொரியா தமது அனைத்து அணுஆயுத உற்பத்தி ஆலைகளையும் மூடுவதற்கு உறுதியளித்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்ரீபன் பீகன் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அந்த நாட்டினால் இந்த உறுதமொழி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீபன் பீகன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், இந்த உறுதிப்பாடு தொடர்பில் வடகொரியாவினால் தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
Related posts:
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் காலமானார்!
கொரோனா தாண்டவம்: இதுவரை 33 ஆயிரத்து 993 பேர் பலி!
உக்ரைன் போராட்ட களத்தில் அமெரிக்காவும் ஈடுபட வேண்டிய நெருக்கடி நிலை - மூன்றாம் உலக போருக்கு வழி வகுக...
|
|
|


