துருக்கி செல்லும் ஜேர்மனியர்களுக்கு எச்சரிக்கை!

Friday, July 21st, 2017

துருக்கிக்கு பயணம் செய்வதில் அவதானமாக இருக்க வேண்டும் என ஜேர்மனிய மக்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற கைது சம்பவங்களை மேற்கோளிட்டு மேற்படி பயண எச்சரிக்கை விடுத்துள்ள ஜேர்மனி, இத்தகைய கைதுகளின் போது சர்வதேச சட்டத்தையும் மீறி தூதரக அணுகலை அங்காரா மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜேர்மனிய வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கப்ரியல் தெரிவிக்கையில், “தனிப்பட்ட தேவைகளுக்காகவோ அல்லது வணிக ரீதியிலோ துருக்கி செல்லும் ஜேர்மனியர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும். அத்துடன், துருக்கி செல்லும் போது ஜேர்மனிய தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: