அட்லாண்டிக் கடல் பயங்கர நிலநடுக்கம்!
Monday, August 29th, 2016
அட்லாண்டிக் கடலில் உள்ள வடமேற்கு அசென்சன் தீவு பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அட்லாண்டிக் பெருங்கடலை மையமாக வைத்து உருவான இந்த நிலநடுக்கம் அசென்சன் தீவில் இருந்து சுமார் 975 கி.மீ தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உடனடியாக சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாகவும் எந்த தகவலும் இல்லை.
Related posts:
அமெரிக்காவுக்கு இடம் ஒதுக்கீடு: சீனாவிலுள்ள தென் கொரியாவின் பிரபல நிறுவனத்தில் சோதனை!
தொடர் மழையால் நடந்த துயரம்: 112 பேர் பலி!
பயங்கரவாதம் எங்கு இருந்தாலும் அது மனித குலத்திற்கு எதிரானது - பிரதமர் மோடி சுட்டிக்காட்டு!
|
|
|


