அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து – மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!
Friday, March 27th, 2020
இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்குள் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், அதைத் தடுப்பதற்கான போதிய மருத்துவ வசதிகள் கூட நம்மிடம் இன்னும் இல்லை” என்கிற எச்சரிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் பிரதமர் மோடிக்குக் கொடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி மாதமே கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்த நிலையில் , இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மார்ச் முதல் வாரம் தெரிய ஆரம்பித்ததும்தான், நாள்தோறும் ஒவ்வொரு திட்டமாக மத்திய அரசு அறிவிக்க ஆரம்பித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, நேற்றுமுன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது அடுத்த 21 நாள்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தப்போவதாக அறிவித்தார். அத்துடன் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தையும் அவசரமாகக் கூட்டியுள்ளார் பிரதமர் மோடி.
மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதால், பல கோடி மக்கள் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதால் அதற்கு மாற்று ஏற்பாடுகள் குறித்தும், கொரோனா பரவலைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் அதில் ஆலோசனை செய்யப்பட்டது.
கடந்த 22-ம் தேதி, நாடு முழுவதும் சுய ஊரடங்கு நடைபெற்ற சமயம், வட மாநிலங்களில் பலரும் அன்று மாலை கூட்டம் கூட்டமாக வந்து கைகளைத் தட்டியது அந்த ஊரடங்கின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியது. அதற்குப் பிறகு உலக சுகாதார நிறுவனம் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் நாளுக்கு நாள் இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகரிக்கும் என்றும் இந்தியாவில் போதிய கட்டுப்பாடுகளை இன்னும் மக்கள் பின்பற்றவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தது.
அதற்குப் பிறகே பிரதமர் மோடி மக்களிடம் வைரஸ் குறித்த அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்திக்குறிப்பையும் வெளியிட்டதுடன் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுத்தம், ரயில் போக்குவரத்து நிறுத்தம் எனப் பல அதிரடிகளை அரசு அறிவித்தது.
ஆனால் அடுத்த இரண்டு நாள்களில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கொடுத்த அறிக்கை பிரதமரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
அதாவது இந்தியாவில் தற்போது போதிய அளவில் பரிசோதனை மேற்கொள்ளக் கூட வசதிகள் செய்யப்படவில்லை என்றும், எங்களுடைய ஆய்வின்படி இன்னும் சில நாள்களில் இந்தியாவில் ஒரு லட்சம் நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவலாம். அடுத்த இரண்டு நாள்களில் இந்த வைரஸ் தொற்று மூன்று லட்சமாகப் பரவும். டெல்லியில் மட்டும் இரண்டு லட்சம் நபர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படலாம். மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களும் கடுமையாகப் பாதிக்கபடும். மக்களிடம் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் இல்லாமல் இருக்கிறார்கள். பிப்ரவரி மாதம் முதல் அடுத்த இருநூறு நாள்களுக்கு இந்த வைரஸின் வீரியம் இந்தியாவில் அதிகமாக இருக்கும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்..
இந்நிலையில் மக்கள் அடர்த்தி குறைவாக உள்ள ஐரோப்பிய நாடுகளே இந்த நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும்போது, மக்கள் அடர்த்தி அளவுக்கு அதிகமாக இருக்கும் இந்தியா இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும் எனவும் வல்லுனர்கள் சுட்டிகாட்டியுள்ளனர்.
Related posts:
|
|
|


