அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 46 பேர் பலி!
Thursday, July 8th, 2021
அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 46 ஆக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
சா்ஃப்சைட் பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்துடன், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 46-ஆக உயா்ந்துள்ளது.
இந்த விபத்துக்குப் பிறகு மாயமாகியுள்ள 99 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24 ஆம் திகதி இடிந்து விழுந்தது.
1981 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தின் மற்ற பகுதிகளையும் இடிக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.
Related posts:
இலங்கை உள்ளிட்ட அகதிகளை ஏற்பதில் அமெரிக்கா செனட் எதிர்ப்பு!
5 நாடுகளின் இறக்குமதி வரியை நீக்கியது சீனா!
ஒடிசாவில் நிலநடுக்கம் : மக்கள் வீதிகளில் தஞ்சம்!
|
|
|


