அடாவடி செய்யும் வடகொரியா : அதட்டுகிறது ரஷ்யா..!

Thursday, August 31st, 2017

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

வடகொரியாவின் இந்த சோதனைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்புகள் தெரிவித்தாலும், வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கு போர் ஏற்படும் பதற்றமான நிலை உருவாகி, தற்போது தான் அந்த அச்சம் இல்லாமல் இருந்தது.இந்நிலையில் வடகொரியா திடீரென்று ஜப்பான் வான்வெளியைத் தாண்டி ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த செயலால் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த செயல் வருத்தம் அளிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது, அதில், வட கொரியா எடுத்து வரும் நடவடிக்கைகளால் மிகவும் வருத்தம் அளிக்கிறது. வட கொரியாவால் மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளது.

Related posts: