அச்சுறுத்தல் குறைவடைந்துள்ளது – பிரித்தானிய பிரதமர் தெரேசா மே!

Monday, May 29th, 2017

பிரித்தானியாவுக்கான  அச்சுறுத்தல் அதிகரித்திருந்த நிலையில், அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் குறித்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் இருப்பினும், அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.மேற்குறித்த அறிவித்தலை அவர் நேற்று (சனிக்கிழமை) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பிரித்தானியாவில் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு என முன்னாள் தீவிரவாத எதிர்ப்பு அமைச்சர் கிம் ஹொவெல்ஸ் (Kim Howells) தெரிவித்துள்ளார்.

மஞ்செஸ்டர் அரீனா பகுதியில் கடந்த திங்கட்கிழமை கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து 22பேர் உயிரிழந்ததுடன் 64பேர் காயமடைந்தனர்.குறித்த தாக்குதலை மேற்கொண்ட சல்மான் அபேடி எனும் 22வயது மதிக்கத்தக்க இளைஞனும் இந்த  தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: